Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பருத்தித்துறை நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு

பருத்தித்துறை நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்துள்ளதென பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடமராட்சி பிரதேச மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் இருந்து சிறுவர் தொடர்பான மற்றும் சிறுவர்களுக்கான நன்நடத்தை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகமான வழக்குகள் சிறுவயதில் காதல் திருமணம், பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், சிறுவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகுதல், இடை நடுவில் கல்வியை கைவிடுதல் போன்றனவாகும்.

எனவே இது தொடர்பான நல்வழி முறைகளை எடுத்துக் கூறி உரிய தரப்பினர் கவனம் எடுக்கும் போது சிறுவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக உருவாக்கப்படுவார்கள். அத்துடன் பெற்றோர்க,த பாதுகாவலர்கள் தமது பிள்ளைகள் தொடர்பான செயற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறைவடையும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினமாகிய இன்று  இவ்வாறான செய்தியை தருவது மிகுந்த வேதனையாக உள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com