Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » படுத்துறங்க இடம் கேட்டு வந்தவர்கள் நகைகளை சுருட்டினர்;மடக்கிப்பிடித்தனர் பொலிஸார்

படுத்துறங்க இடமில்லை என உதவி கேட்டுவந்த இருவர், இரவு தங்கி இருந்து வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களைத் திருடிச் சென்றனர்.

சந்தேக நபர்களைச் சாவகச்சேரிப் பொலிஸார் பள்ளிவாசல் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சாவகச்சேரி ரயில் நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் நகை வேலை செய்யும் கடை வைத்திருக்கும் ஒருவர் அந்த வீட்டில் தங்கியுள்ளார். சந்தேக நபர்கள் வீட்டாரிடம் கேட்டு அன்றிரவு தங்கியுள்ளனர். அதன் போதே கடைக்காரரின் நகைகள் திருடப்பட்டுள்ளன.  இத்திருட்டு தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அந்த இருவரையும் கைது செய்த பொலிஸார் திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.

இருவரையும் பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிவான் மா.கணேசராஜா.நகைகளை விற்கவோ, அழிக்கவோ கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவை உரிமையாளரிடம் நீதிமன்றால் கையளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com