Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நாளைமுதல் யாழ்நகரில் ஒக்ரேன் 95 பெற்றோல்,சுப்பர் டீசல்

யாழ்ப்பாணத்திலும் சுப்பர் பெற்றோல் ஒக்ரேன் 95 மற்றும் சுப்பர் டீசல் என்பன நாளை ஞாயிறு முதல் விநியோகிக்கப் படவுள்ளதென இலங்கை பெற் றோலியக் கூட்டுதாபன யாழ். பிராந்திய அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுப்பர் பெற்றோலும் சுப்பர் டீசலும் மணிக்கூட்டு வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட  எரிபொருள் விற்பனை நிலையம் மற்றும் சுன்னாகம் எரிபொருள் நிலையம் ஊடாக விநியோகிக்கப்படும்.இதற்கென கொழும்பில் இருந்து கனரக பவுஷர் வாகனம் மூலம் சுப்பர் ஒக்ரேன் 95 பெற்றோலும் டீசலும் இன்று எடுத்து வரப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் ஒக்ரேன் 90 பெற்றோ லும் ஓட்டோ டீசலுமே பாவனை யில் இருந்துவருகின்றன. தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அநேகமாக சுப்பர் பெற்றோல் ஒக்ரேன் 95, சுப்பர் டீசல் போன்ற எரிபொருள் களையே பயன்படுத்தி வரு கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com