Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தன்று 600 பொலிஸார்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்திரு விழா தினத்தன்று ஆலயச் சூழலில் 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுவர் என யாழ்ப் பாண பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத் தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.

நல்லூர் கந்தன் ஆலய தேர்த்திருவிழா உற்சவதினத்தன்று வருடம் தோறும் பெரு மள வான பக்தர்கள் கலந்து கொள்வர். இம் முறை தென்பகுதி மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் என்றுமில்லாதவாறு பெருமள வான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சன நெரிசலை கட்டுப் படுத்தவும் திருடர்களின் செயற்பாடுகளை நிறுத்தவும் அதிகளவான பொலிஸாரை கட மையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத் துப் பொலிஸ் பிரிவுகளிலிருந்தும் பொலிஸார் அழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்படு வர் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை நல்லூர் கந்தன் ஆலய உற்சவகாலத்தில் தினமும் சுமார் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com