Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » நயினாதீவில் தொடரும் மாடுகளின் களவுகள் (படம் இணைப்பு)

நயினாதீவுப் பகுதியில் கடந்த சில நாட்களாக மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வளர்ப்பு மாடுகள் மற்றும் கோவில் மாடுகள் களவாடப்பட்டு அது இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக நயினாதீவில் அதிகரித்து வருவதாகப் பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களால் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாடு ஒன்று இறைச்சிக்காகக் களவாடப்பட்டுக் கொலை செய்யப்பட்டது. பின்னர் அது ஒரு பசு மாடு என்று அறிந்த திருடர்கள் அதனை ஒரு குழியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இதுபோன்று நயினை நாகபூசணி அம்மனுக்குச் சொந்தமான மாடு ஒன்று களவாடப்படும் நோக்கில் தாக்கப்பட்ட நிலையில் திருடர்களிடம் இருந்து அது தப்பி வந்துள்ளதாகவும் அம் மாட்டின் தலைப் பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டிருந்ததாகவும் ஆலய வட்டாரத் தகவல்கள் தெரவிக்கின்றன.

எனவே மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நயினாதீவு பொலிஸ் நிலையத்திலும் வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்திலும் பொதுமக்களாலும் ஆலய நிர்வாகத்தினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நயினாதீவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவகன்

2 Comments

  1. Vimal says:

    என்ன கொடுமை இது எம் இனத்துக்கு …………

    இவ்வளவு கொடுமைகளுக்கும் இடையில் ஊர் திருடர் உள்ளம்??

    நாடுதான் இப்படி என்றால் மாடுகளுக்கும் பாதுகாப்பு இல்லையே

  2. manibharathi says:

    உங்கள் பதிவுக்கு நன்றி !!!

    Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

    http://www.ellameytamil.com

    இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்…

    http://www.ellameytamil.com

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com