Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » தேசிய பாதுகாப்புத் தினம் இம்முறை யாழ்ப்பாணத்தில்

தேசிய பாதுகாப்பு தினம் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் 26ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்தக் கொண் டாட்டங்களை நடத்தவும் முடிவாகியுள்ளது.
இதுதொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற் றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிலையப் பணிப்பாளர் நந்தரட்ண தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
2006ஆம் ஆண்டுமுதல் தேசிய பாது காப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின் றது. முதலாவது வருடம் காலியிலும் அடுத்த வருடம் இரத்தினபுரியிலும் தொடர்ந்து கண்டியிலும், குருநாகலிலும் இதுதொடர் பான நிகழ்வுகள் இடம்பெற்றன.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் ஒருங் கமைப்பதற்காக 14 குழுக்கள் அமைக் கப் பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வகையான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் பொலிஸ், இராணுவ, கடற்படை, விமா னப்படை ஆகியோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களின் “”பான்ட்” அணிவகுப்பும் இடம்பெறும்.
மேலும் தேசிய பாதுகாப்பு தினம் சம் பந்தமாக பாடசாலை மாணவர்களுக்குக் கட்டுரைப்போட்டி, சித்திரப்போட்டி ஆகி யன நடத்தப்படவுள்ளன.
“தடுப்போம் அனர்த்தத்தை, பாதுகாப் போம் இலங்கையை”, “அனர்த்தமில்லாத சூழலும் சிறந்த வாழ்க்கையும்” என்னும் தொனிப்பொருள்களில் இந்தப் போட்டி கள் இடம்பெறும். தரம் 7, 8, 9ஆம் பிரிவு மாணவர்கள் 750 சொற்களுக்குக் குறை யாமலும், தரம் 10, 11ஆம் பிரிவு மாண வர்கள் 1,200 சொற்களுக்குக் குறையாம லும், மேற்பிரிவு மாணவர்கள் 1,500 சொற்களுக்குக் குறையாமலும் கட்டுரை எழுதுதல் வேண்டும். இதுதொடர்பான சகல விவரங்களும் வலயக் கல்விப் பணி மனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கான பூரண ஒத்து ழைப்பை நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதுதொடர்பான அடுத்த கூட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர், மேல திக அரசாங்க அதிபர், பிரதேச செயலர் கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், படை அதி காரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com