Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » தமிழக மீனவர்கள் 112 பேரை வளைத்துப்பிடித்தனர் வடமராட்சி கடற் தொழிலாளர்கள்(படங்கள் இணைப்பு)

வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி 18 இழுவைப் படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 112 தமிழக மீனவர்கள் வடமராட்சி மீனவர்களால் பிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதில் வடமராட்சி தொண்டை மானாறு முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பிலேயே நேற்று மாலை 3.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மேற்படி தமி ழக மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதுடன் வடமராட்சி மீனவர்களினால் கடலில் விரிக்கப்படும் வலைகளை சேதப்படுத் தியும் வந்தனர்.இது தொடர்பில் பல்வேறு மட்ட ங்களுக்கும் வடமராட்சி மீனவர்கள் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் தமிழக மீனவர்கள் குடாநாட்டுக் கடற்பரப்பில் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டு வருவது குறித்து யாழ்.மாவட்ட கடற்தொழி லாளர் சமாசங்களின் சார்பில் குழு ஒன்று தமிழகம் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.எனினும் தமிழக மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கை நீடித்து வந்தது.

இந்நிலையில் வடமராட்சி தொண்டைமானாறு முதல் நாகர்கோயில் வரையான கடற்பரப்பில் நேற்று மாலை 3.00 மணியளவில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீன வர்களை, வடமராட்சி மீனவர்கள் ஒன்றிணைந்து படகுகளில் சென்று பிடித்துவந்தனர். சுமார் 30 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட வடமராட்சி மீனவர்கள் இரவு 7.00 மணிவரை 112 தமிழக மீனவர்களைப் பிடித்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த குறித்த 112 மீனவர்களும் 18 இழுவைப் படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்டனர். இழுவைப் படகுகளும் பருத் தித்துறை முனைக் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.



Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com