Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » தனியார் கையகப்படுத்திய பொதுச் சொத்துக்களை மீளப் பெறவுள்ளது வலி.கிழக்கு பிரதேச சபை

வலி.கிழக்குப் பிரதேச சபை பொதுப் பாவனையில் இருந்து தனியாரால் கையகப்படுத்தப் பட்ட காணிகளின் விவரங்களைத் திரட்டி அவற்றைச் சபையின் பயன்பாட்டுக்கு மீளப்பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

வலி.கிழக்குப் பிரதேசசபையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட பகுதியில் தருமசாதனம் செய்யப்பட்ட காணிகள், மற்றும் பொதுக்கிணறுகள், கால்நடைகளின் பாவனைக்குப் பயன் படுத்தப்பட்ட குளங்கள், கேணிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்யும்போது தங்கிச் செல்வதற்குப் பயன்படுத்திய மடங்கள், தங்குமிடங்கள் என் பன பல தனிப்பட்டவர்களால் சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட சொத்துக்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட பொது இடங்கள், தருமசாதனக் காணிகள் தொடர்பான விவரங்கள் பிரதேச சபைக்கான வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி அமைப்பு உரிய முறையில் செயற்படாமையால் மேற்படி சொத்துக்கள் உரிய முறையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக வலி.கிழக்கு பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தகவல் தெரிவிக்கையில், பொதுச் சொத்தை மற்றும் பிரதேசசபையின் பயன்பாட்டுக்கும் ஆளுமைக்கும் உரியதை தனியார் தமது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

குளம் நிரப்பப்பட்டு அதில் தனியார் இல்லம் அமைத்துள்ளனர். பொதுமக்கள் தங்கிச் செல் வதற்கான மடங்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிப் பதற்கான குளங்கள், கேணிகள் மூடப்பட்டுத் தனிப்பட்டவர் களின் பாவனையில் உள்ளன. இவற்றை அனுமதிக்க முடியாது.

பிரதேச சபைப் பிரிவின் வரைபடத்துடன் ஒப்பிட்டு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் இருந்த இடம் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன.

தற்பொழுது பயன்பாட்டில் வைத்திருப்போருக்கு நிலைமையை விளக்கி சமாதான முறையில் அவற்றைப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அது வெற்றியளிக்காவிடில் சட்ட நடவடிக்கை மூலம் பெறுவ தற்குச் சபை ஏற்பாடுகளைச் செய்யவுள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com