Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சுன்னாகம் பகுதியில் மாலை 6 மணிக்குப் பின் கூட்டமாக நிற்கத் தடை

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக் குப் பின் வீதிகளில் கூடும் இளை ஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார அறிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதிகளில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பொது மக் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார மேலும் கூறியதா வது, சந்திகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் மாலை 6 மணிக்குப் பின் தேவை யற்ற விதத்தில் கூடுதல் அல்லது நடமாடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

ஆட்டோ தரிப்பு நிலையங்களில் சாரதி களைத் தவிர வேறு எவரும் நிற்பது தவிர்க்கப்படல் வேண்டும்.மது போதையில் வாகனம் செலுத்துதல், கூட்டமாகச் சைக்கிள்களில் பயணிப்பது என் பனவும் நிறுத்தப்படல் வேண்டும்.பெண்கள் மீது சேஷ்டை புரிபவர்கள் வீதி களில் மோதலில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். இதேவேளை 24 மணி நேரத்திலும் முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர் எனவும் களவு, கொள்ளைச் சம் பவங்கள் தொடர்பாக உடனடியாக முறையிடு மாறும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com