Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சுன்னாகத்தில் மூலிகை தொடர்பான விழிப்புணர்வு(படங்கள்)

சுன்னாகம் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களினால் மூலிகை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக்கல்லூரி அதிபர் வைத்த்திய கலாநிதி பரமசிவம் கமலலோஜினி தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் மூலிகை தொடர்பான கருத்துரைகளை 2ம்,3ம்,வருட மாணவர்கள் வழங்கினர். இக்கருத்தரங்கு நிகழ்வில் கொவ்வை, அறுகு, காக்கனவன், தூதுவளை,வாழை, அகத்தி, வசம்பு, வல்லாரை, மாதுளை, குறிஞ்சா, வாழ், அகத்தி, வசம்பு, ஈகிய மூலிகைகளின் பயன்பாடு தொடர்பாகவும் அவற்றின் நோய் தீர்க்கம் குணவியல்பு தொடர்பாகவும் இம் மூலிகைகளை வீடுகளிலும் பாடசாலைகளிலும் வளர்ப்பதன் அவசியம் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் வைத்திய கலாநிதி இ.தில்லைவாசன் நாகேஸ்வரி வித்தியாலய அதிபர்ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் லங்கா சித்த ஆயள்வேத மருத்துவக்கல்லூரியினரால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆகியோருகக்கு வீட்டில் வளர்க்கப்படும் மூலிகைக்ள அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் பாடசாலையில் மூலிகை மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
– குமரன்



Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com