Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சித்தன்கேணி சிவன் கோயிலில் ரூ.20 லட்சம் பொருள்கள் திருட்டு

சித்தன்கேணி, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 20 லட்சம் ரூபா பெறுமதியான பித்தளைப் பொருள்கள் திருடப் பட்டுள்ளன. பித்தளையினாலான 25 குத்துவிளக்குகள் திருடப்பட்டுள்ளன என்றும் பித்தளையினாலான பஞ்சாலாத்தி உட்பட ஆலயப் பொருள்கள் பலவும் களவாடப்பட்டுள்ளன என்று ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார்.

“4,5 பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத அடுக்கு குத்துவிளக்குகள் சுமார் 6 அடி உயரமானவை ஐந்தை எடுத்துச் சென்றி ருக்கிறார்கள். ஒவ்வொன்றின் பெறுமதியும் இன்றைய விலை யில் 150,000ரூபா. ஏனைய பித்தளைப் பொருள்கள் யாவும் 10 முதல் 13 லட்சம் பெறுமதியானவை” எனவும் இவ்வாறு திருட்டுப் போன பொருள்களில் 200 வரு டங்கள் பழைமை வாய்ந்த வெண்கலப் பெருள்களும் அடங்கும் என்றும் குருக்கள் தெரிவித்தார்.இரவு 12 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸில் முறை யிடப்பட்டுள்ளது.
அலவாங்கு மற்றும் இரும்புக் கம்பியால் கதவுகள் உடைக் கப்பட்டு, களஞ்சிய அறையில் வைக்கப்பட்ட சகல பித்தளைப் பொருள்களும் களவாடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர். திருடர்கள் கோயிலின் தெற்குப் புறமுள்ள மதில் மூலம் உள் இறங்கி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.வட்டுக்கோட்டைப் பொலிஸார் ஆலயத்துக்கு நேரில்வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை சங்கானை தெற்கில் கடந்த 9 ஆம் திகதி பட்டப்பகலில் மாவடி ஆலய வீதியில் உள்ள ஓர் வீட்டில் கைத்தொலைபேசியும் கைப்பையும், அராலி வீதியில் ஓய்வு பெற்ற அதிபரின் வீட்டில் இரண்டு கைத்தொலைபேசிகளும் 49 சீசீ மோட்டார் சைக்கிளும் ஒரு நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது பற்றி மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் அவர்களால் இதுவரை எதுவித நடவடிக் கை யும் மேற்கொள்ளப்பட வில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
சங்கானை மாவடி ஞான வைரவர் ஆலயத்தில் சீடீ பிளேயர் ஒன்றை திருட எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக் கப்பட்டுள்ளது. ஓட்டோ சாரதி ஒருவர் சீடீ பிளேயரை ஆலயத் தின் அறையில் இருந்து எடுத்து வரும் போது தற்செயலாக அங்கு சென்ற அயல்வீட்டுக்காரரைக் கண்டவுடன் சி.டீ.பிளேயரைக் கைவிட்டு ஓட்டோவில் தப்பிச் சென்றுவிட்டார். இவை யாவும் பட்டப்பகலில் நடை பெற்ற சம்பவங்களாகும். வலிமேற்கில் குறிப்பாக சங்கானைப் பகுதியில், வீடுகளில் ஆள்கள் இல்லாதபோது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வீட்டில் ஒருவராவது தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொது மக்கள் விசனப்படுகின்றனர்.திருட்டுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதிருக்கும் பொலிஸார் மீதும் அவர்கள் ஆத்திரமுற்றுள்ளனர்.
-உதயன்-

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com