Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சாவகச்சேரி நகரை சுத்தமாகப் பேண நாளை முதல் புதிய நடைமுறை

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தை குப்பைகளற்ற சுத்தமான, பசுமை யான பகுதியாக மாற்றும் திட்டத்தின் முன்னோடியாக வீடுகளிலும் நிறுவனங்களிலும் சேரும் திண்மக் கழிவுகளை சுற்றாடலுக்குப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அகற்றுவ தற்கு நகரசபை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நடைமுறை நாளை திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருவதால் பிரதேச மக்கள் பின் வரும் வகைகளில் கழிவுகளை நகரசபை வாகனம் வரும் இடங்களில் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.உக்கக்கூடிய இலை, குழை, சருகுகளை தனியாகவோ அல்லது ஆட்டெரு, மாட்டெருவுடன் சேர்ந்த கூட்டெரு முறையில் பசளையாக்கி தமது காணிகளில் புதைக்க முடியாதவர்கள் அவற்றினை உரப்பைகளிலிட்டும் கண்ணாடி மாபிள் கழிவுகளை தனியாகவும் சேகரித்து நகரசபை கழிவகற்றும் வாகனங்களில் எடுக்கக்கூடிய இடங்களில் வைக்குமாறும் பின்வரும் தினங்களில் நகரசபை கழிவகற்றும் வாகனங்கள் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அன்றையதினம் காலை 8.30 மணிக்கு முன்னர் உரிய இடங்களில் கழிவுப்பொருள்களை வைக்குமாறும் அத்துடன் நுளம்பு பெருகக் கூடிய கொள்கலன்களையும் கழிவகற்றும் வாகனங்களில் கையளிக்குமாறும் கேட்டுள் ளார்.
பிரதி திங்கட்கிழமைகளில் முதலாம், மூன்றாம் வட்டாரங் களிலும் செவ்வாய்க்கிழமைக ளில் இரண்டாம், பதினொராம் வட்டாரங்களிலும் புதன்கிழமை களில் நான்காம் ஐந் தாம் வட் டாரங்களிலும் வியாழக்கிழமை களில் ஒன்பதாம், ஏழாம் வட்டாரங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் எட்டாம், பத்தாம் வட்டா ரங்களிலும்  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதாம் வட்டாரத்திலும் வாகனங்களில் கழிவு அகற்றப்படும் எனவும் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை புதைப் பதையோ எரிப்பதையோ அல்லது கண்ட இடங்களில் வீசுவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதேச மக்களை நகரசபைத் தலைவர் கோரியுள்ளார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com