Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சமாதானத்தை வலியுறுத்தும் நிகழ்வு நேற்று ஒஸ்மானியாக் கல்லூரியில்

சர்வதேச சமாதானதினத்தை முன்னிட்டு சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் சமாதானத்தை முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகள் நேற்றுத் திங்கட்கிழமை யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றன.

இதில் ஒஸ்மானியாக் கல்லூரியைச் சேர்ந்த தரம் 6 முதல் தரம் 11வரையிலான மாணவர்களும், பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன, மத, மொழி பேதமற்ற இளம் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர் எஸ்.மகேந்திரம், பாடசாலை ஆசிரியர் மௌலவி பௌசர் மற்றும் தரம் 11ஐச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் சமாதானத்தை முன்னிலைப்படுத்தி உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சமாதானத் துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் மாணவர்களிடையே ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com