Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சங்கக் கடையில் பணம் என நினைத்து சமுர்த்தி முத்திரைகளைக் களவாடிய சிறுவர்கள்

மானிப்பாய் ப.நோ.கூ.சங்க நவாலி கிளை 6 இல் களவு  போன 67 ஆயிரம் ரூபா பெறுமதியான சமுர்த்தி உணவு முத்திரைப் புள்ளிகள் நவாலி பிரதான வீதியோரத்தில் சிந்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
கடந்த வியாழன் மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அழகிய உடை அணிந்த 16 வயது மதிக்கக் கூடிய யுவதியும், 10 வயது, 12 வயதுடைய இரு சிறுவர் களும் சம்பந்தப்பட்ட கடைக்கு முன் வந்திறங்கினர். சில நிமிட நேரத்தில் இரு சிறு வர்களும் உள்ளே சென்று முகாமையாளரிடம் “ரொபி’ தருமாறு சிறு தொகைப் பணத்தை கொடுத்து விட்டு பகிடிக் கதைகள்  பேசிக் கொண்டிருந்தனர். அந்தச் சிறு வர்களில் ஒருவர் தனது கையினை மேசைக்கு கீழால் லாச்சியின் பின் பக்க வெளி யூடாக உள்ளே விட்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பார்சலை பணமென நினைத்து “நைசாக’ எடுத்து தனது காற்சட்டைப் பொக்கற்றில் வைத்த பின்னர் போய் வருகிறோ மென கூறி மோட்டார் சைக்கிளில் விரைவாக சென்று மறைந்தனர்.
இடையில் இவர்கள் அப்பார்சலை பிரித்துப் பார்த்தபோது உணவு முத்திரைப் புள்ளிகள் இருந்ததைக் கண்டு திகைப்படைந்து வீசி ஏறிந்து விட்டு சென்றுள்ளனர். மறுநாள் தமது வீட்டு வாசலை துப்புரவு செய்வதற்கு வந்த பெண்மணியும்  ஏனை யோரும் இவற்றை எடுத்து கிளை முகாமையாளரிடம்  ஒப்படைத்தனர்.
இவற்றில் இன்னும் ஐயாயிரம் ரூபா பெறுமதியான புள்ளிகள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம்  அங்குள்ள இரு கடைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த இருபதினாயிரம் ரூபா பணமும் மற்றொரு கடையில் மூவாயிரம் ரூபா பணமும் காணாமற்போயுள்ளது.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com