Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கொக்குவில் பகுதியில் நடந்த அசம்பாவிதத்தில் தளபாட வியாபாரிகள் மூவர் காயமுற்றனர்

கொக்குவில் பிரம்படியில் அம்மன் கோயில் பகுதி யில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் தென் னிலங்கை வியாபாரிகள் மூவர் வாள் வெட்டுக்கு  இலக்காகினர்.
அடையாளம் தெரியாத சிலர் இந்தத் தாக்கு தலை நடத்திய தாகக் கூறப் படுகின்றது.
இது குறித்து தெரியவருவதாவது:
வாகனம் ஒன்றில் தளபாடகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்த தென்னிலங்கைவாசிகள் ஏழு பேர் கொக்கு வில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டில்கள் மற்றும் தளபாடங்களை காவிக்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் நால்வர் திக்குத்திக்காக சென்றிருந்தனர். மூவர் வாகனம் நிறுத்தி இருந்த இடத் தில் நின்ற சமயம் அங்கு திடீரென சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும் பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அந்தக்கும் பலைச் சேர்ந்தவர்கள்  முகத்தை கறுப்புத் துணி யால் மூடி மறைத்திருந் தனர் என்றும் அவர்களி டம் கத்தி, வாள், பொல் லுகள் என்பன இருந் தன என் றும் தெரிவிக் கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந் தார். மற்றும் இருவர் காயமடைந்தனர். அவர் கள் வந்த வாகனத்தை (லொறி) தீயிட்டு எரிக் கவும் முயற்சிக்கப்பட்டது.
இவ்விடத்தில் கூடிய பிரதேச
வாசிகள் அவர்களுக்கு உதவி, ஒத்தாசைகள் வழங்கிய அதேவேளை, இச் செயல்குறித்து அதிருப்தி தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவத்தில் மொறட்டுவ, கொரளவெல பகுதியைச் சேர்ந்த எஸ். கமல் (வயது  27 ), எஸ். சஞ்சீவ் (வயது16), நிஷாந் (வயது28)  ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
“யாழ்ப்பாணத்துக்கு வந்து நீங்கள் இனிமேல் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது’ என்று எச்சரித்தவாறே தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
பொலிஸார் இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்குகொண்டு வருகின்றனர்.

நன்றி்: உதயன்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com