Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கொக்குவில் இந்துவின் தவப்புதல்வி சிவபதமடைந்தார்

திருமதி சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம்கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் 40 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி சுகிர்தலஸ்மி சுப்பிரமணியம் கடந்த 08/09/2011 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் சேவை விபரம்

1927  -ஆரம்பக்கல்வி
1942 – ஆசிரியர் கொக்குவில்
1983 – பிரதி அதிபராக இளைப்பாறியது
1993  -கனடாவுக்கு குடிபெயர்ந்தது
1994  -கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி 4 வருடங்கள் அதன் தலைவராக இருந்து இன்று வரை உப தலைவராக….
கொக்குவில் இந்துக் கல்லூரி இன்றேல் அவரில்லை. அவர் இன்றேல் பாடசாலை இல்லை. என்று கூறினால் அது மிகையில்லை. ஜெர்மன், நோர்வே, அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்க மாணவர்களுக்கு இவர் தமது ஆலோசணைகளை வழங்கியுள்ளார். கனடா, ஜேர்மனி, கொக்குவிலில் இடம்பெற்ற, பாடசாலை நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை அவரின் சேவையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
இளைப்பாறிய பின் அவரின் சேவையை வளர்மதி சனசமூக நிலையத்திற்கு வழங்கியுள்ளார். 1990 -91 ஆண்டுகளில் நந்தாவில் கல்புலத்து அம்பாள் ஆலயத்தின் நிருவாக சபை உறுப்பினராக செயற்பட்டு நிர்வாக சபை, பரிபாலன சபை, இரண்டையும் ஒன்றாக்கி ஆலயத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானதாகும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com