Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம் மே மாதம் முதல் இயங்க உள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபைக்குரிய பனைவள ஆராய்ச்சி நிலையமானது மீளக்கட்டியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பிலான விரிவான கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

மீள் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள யாழ் கைதடியிலுள்ள மேற்படி கட்டடத்திற்கான இயந்திரங்கள், தளபாடங்கள், வாகனங்கள் உட்பட ஏனைய அனைத்து வசதிகளும் எதிர்வரும் மே மாதமாகும் போது இந்திய நிதி உதவியின் மூலம் பூர்த்தி செய்யப்படவுள்ளமை தொடர்பில் இந்திய தூதரக செயலாளர் திரு.மோகன் இதன் போது கருத்து தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கமைய சென்னை மற்றும் கேரளா, திருவனந்தபுரத்தில் அமையப்பெற்றுள்ள பனைவள ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழக விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்த பனைவள அபிவிருத்தி சார்ந்த பயிற்சிகளை எமது நாட்டவர்களுக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இயந்திராதிகள் கொண்டுவரப்பட்டு பொருத்தப்படுவதுடன் அது சார்ந்த இயக்கும் அடிப்படை பயிற்சிகளும் இந்தியத் தொழில்நுட்பவியலாளர்களால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீளச் செயற்படுத்தப்படவுள்ள மேற்படி பனைவள ஆராய்ச்சி நிலையத்திற்கென புதிதாக ஆளணிகளை இணைத்துக்கொள்ளும் முகமாக அதற்கான அனுமதி பெறப்படுவது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அதேநேரம் பனை வளம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிகளைப் பெறுவதுடன் இதன் மூலம் நிபுணத்துவ பயிற்சிகளை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர்கள், மற்றும் அமைச்சு அதிகாரிகள், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், பொது முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com