Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கைதடி கிழக்கில் விருந்தாளியாக வந்தவர் பொருள்களுடன் மாயம்

சில நாள்கள் பழகிய ஒருவர் நண்பர் போல் வீடு வந்து அங்கு விருந்துண்டு பின் அங்குள்ள பெறுமதிமிக்க பொருள்களை அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று கடந்த வாரம் கைதடி கிழக்கில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

குறித்த வீட்டின் உரிமையாளரைத் தேடிவந்த இளைஞர் ஒருவர் “உங்களை வன்னி யில் சந்தித்திருந்தேன். என்னை நினைவிருக்கின்றதா?” எனக்கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரும் வன்னியில் சில நாள் அவருடன் பழகியதை நினைவில் கொண்டு அவரை தங்க வைத்து விருந்து கொடுத்தார்.

சில நாள்கள் கழிந்த நிலையில் அந்த இளைஞர் தான் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்க இருப்பதாக வீட்டுக்காரருக்கு கூறியுள்ளார். அவரும் வாங்கினால் நல்ல விடயம் தானே என்று கூறினார்.

காலை எழுந்த அந்த இளைஞர் கைதடி சந்திக்குப் போய் வரவேண்டும் எனக் கூற, வீட் டுக்காரரும் தனது புதிய சைக்கிளை கொடுத்து உதவியுள்ளார்.

சைக்கிளை வாங்கிய இளைஞர் ஏற்கனவே வீட்டுக்காரருக்கு தெரியாமல் வீட்டில் திருடிய புதிய கைத்தொலை பேசி, தங்கமோதிரம், எண்ணாயிரம் ரூபா பணம் உட்பட 40 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களுடன் மாயமானார்.

கைதடி சந்திக்குச் சென்றவர் திரும்பி வருவார் என எதிர் பார்த்த வீட்டுக்காரருக்கு இளைஞர் சைக்கிளை மட்டுமல்ல வீட்டில் இருந்த ஏனைய பெறுமதிமிக்க பொருள்களையும் திருடிச்சென்ற விடயம் பின்னரே தெரியவந்தது.

விடயம் அறிந்த அந்தப் பகுதி இளைஞர்கள் உடனடியாகச் சல்லடை போட்டு தேடிய போதும் அந்த இளைஞரை பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com