Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » கைதடி இலவச மருத்துவ முகாமில் 300 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள்

சர்வதேச லயன்ஸ் கழக பி1 மாவட்டங்களான கொழும்பு வோட்டர்ஸ் மீற் லயன்ஸ் கழகமும் கொட்டாஞ்சேனை சேர்க்கிள் லயன்ஸ் கழகமும் இணைந்து கைதடி தெற்கு சனசமூக நிலையத்தில் நீரிழிவு நோய்க்கான மருத்துவ முகாம் ஒன்றை கடந்த ஞாயிறன்று நடத்தி இருந்தது.

இதில் 300 பயனாளிகளுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் 100 பேருக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் வலுவிழந்த சிறுவனுக்குச் சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. அது மட்டுமன்றி அந்தச் சிறுவனுக்கு ஒரு வருடத்துக்கு கழக அங்கத்தவர்களால் சத்துணவு வழங்கவும் ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு மேற்படி கழகங்களின் அங்கத்தவர்களால் அழைக்கப்பட்ட பிரதம விருந்தினர், மாவட்ட ஆளுநர் லயன் பிரியந்த பெர்னாண்டோவும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநரின் செயலாளர் லயன் தேவா பீற்றர் மற்றும் வடபிராந்திய செயலாளர் லயன் பத்ம நாதன் வடபிராந்திய பொருளாளர் லயன் விக்னேஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com