Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவிற்குமிடையில் வடதாரகை2 பயணிகள் கப்பல் (படம் இணைப்பு)

குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவிற்குமிடையில் கடற் பிரயாணத்திற்காக புதிய படகு சேவையில் ஈடுபடவிருக்கிறது.நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையே சேவையில் ஈடுபடுவதற்காகக் கட்டப்பட்ட புதிய படகான “வடதாரகை 2′ நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்குக் குறிகாட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தப் படகு கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருகோணமலை ஊடாக குறிகாட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் படகு நாளை திங்கட்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படும் என படகை எடுத்து வந்த இலங்கைக் கடற்படை ஓட்டிகளான குணசிங்க, நவரட்ண ஆகியோர் தெரிவித்தனர்.

படகில் தண்ணீர் வசதிகள் மலசல கூடவசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் 100 பயணிகளுக்கு மட்டும் என அறிவித்தலும் போடப்பட்டுள்ளது.படகின் கீழ்த்தட்டில் அதிக இருக்கைகள் போடப்பட்டுள்ளதுடன் மேல் தட்டில் குறைந்த அளவிலான இருக்கைகளும் உள்ளன. நேற்று சனிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் படகைப் பார்வையிட்டனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com