Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » குடிசன மதிப்பீட்டுப் பணிகள் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது

அகில இலங்கை ரீதியாக 2011 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டுப் பணிகள் இலங்கை புள்ளிவிவரத் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்திலும் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இலங்கை புள்ளி விவரத் திணைக்களத்தினால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக வரைபடங்கள் பெறப்பட்டுள்ளதுடன் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு வசதியாகக் கிராம அலுவலர் பிரிவுகள் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பகுதிகளில் கிராம அலுவலர்கள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலர்கள் வீடுகள், கட்டடங்கள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்தில் அடையாளமிட நியமனம் செய்ய வேண்டுமா என்ற விவரங்களும் பெறப்படுள்ளன.

தற்போது மாவட்ட செயலகங்களுக்கு குடிசன மதிப்பீட்டுச் சுவரொட்டிகள், குடிசன மதிப்பீட்டின் முக்கியத்துவம் அடங்கிய கைநூல்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஆவணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் புள்ளி விவரவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன.இதனையடுத்து இம்மாத இறுதியில் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புக்கள் அனைத்தும் முடிவடைந்ததும் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com