Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » காச நோய் காரணமாக யாழில் 180பேர் பாதிப்பு-6பேர் உயிரிழப்பு

யாழ். மாவட்டத்தில் 180 பேர் காசநோய் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் எஸ்.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 180பேர் காசநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பரிசோதனை மூலம் இணங்காணப்பட்டுள்ளனர் டின்று அவர் தெரிவித்தார்.

காசநோய்க்கான சளி பரிசோதனை மேற்கொள்ளாது கவனயீனமான முறையில் இருந்த 6 பேர் கடந்த காலாண்டு பகுதியில் உயிரிழந்துள்ளனர். காசநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையினால் இந்நோய் அதிகரித்துள்ளது.

காசநோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்க வேண்டும். இந்நோய்த்தொற்று கிராம மட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது. மீள்குடியேறிய பிரண்துசங்களில் மற்றும் சமூக வடு காரணமாக தமது நலன் தொடர்பாக மக்கள் கவனம் செலுத்து தவறுகின்றார்கள்.

டெங்கு நோய் உயர்ந்த மட்டத்தில் அதிகளவு பரம்பலடைவதனால் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் காசநோயை கட்டுப்படுத்த எடுப்பதில்லை.

காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டால் இந்நோயில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் அதிகரித்து வரும் காசநோய் தொற்றை கட்டுப்படுத்தவும் முடியும் எனவும் காசநோய் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com