Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கலாசாரச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்த களத்தில் குதிக்கிறார் யாழ்.அரச அதிபர்

யாழ். குடாநாட்டில் வர்த்தக நடவடிக்கை கள் விவசாயம், பொரு ளாதாரத் துறைகளின் அபிவிருத்திகள், உல் லாசப் பயணிகள் வருகை என்று அனைத் துச் செயற்பாடுகளும் “ஜெற்’ வேகத்தில் முன்னேறி வருகின்றன.
இவற்றுக்கு ஈடுகொடுக்குமாற் போல் கலாசாரச் சீரழிவுகளும் போட்டிபோட்டுக் கொண்டு அதிகரித்து வருகின்றன. இந்தச் சீரழிவு நிலைமையை அவதா னித்து அதனைக் கட்டுப்படுத்தி ஒழித்துக் கட்ட களத்தில் குதிக்கத் தயாராகி விட்டார் யாழ் அரச அதி பர் இமெல்டா சுகுமார்.
இதுதொடர்பாக யாழ். அரச அதிபர் உதயனுக்குத் தெரிவித்ததாவது:
குடாநாட்டில் அருவருக்கத்தக்க கலா சாரச் சீரழிவுகள் நாளாந்தம் பெருகி வரு வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவை தொடர்பாக பல்வேறு தரப்புக்க ளிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடு களும் வந்த வண்ணமுள்ளன.
இந்த மோசமான நிலைமையைக் கட் டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தன் அவசியத்தை நான் உணர்ந்துள் ளேன். அதற்கான நடவடிக்கைகளிலும் நான் இறங்கியுள்ளேன். இந்த விடயம் தொடர் பாக பொலிஸாரின் உதவியை நாடியுள்ளேன். அவர்களுடன் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடி உள்ளேன். தாம் முழு ஒத்துழைப்பை வழங்கத்தயார்   என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கலாசாரச் சீரழிவுகள் குறித்து பொது மக்கள் முறையிடுவதற்கு வசதியாக பிரத் தியேக தொலைபேசி இலக்கத்தை ஒதுக் கித் தருமாறு பொலிஸாரிடம் கோரியுள் ளேன்.
அந்தத் தொலைபேசி இலக்கம் வழங் கப்பட்டவுடன் கலாசாரச் சீரழிவுகள் தொடர்பில் எமக்கு எவரும் அறியத்தந் தால் பொலிஸார் நடவடிக்கையில் இறங் கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்  என்றார்.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com