Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கந்தசஷ்டி காலத்தில் நல்லூரில் வீதித்தடை – பிற்பகல் வேளை அமுலுக்கு வரும்

இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்ப மாகி தொடர்ந்து ஆறு நாட்கள் நடை பெறும் கந்தசஷ்டியையயாட்டி நல் லூர் கந்தசுவாமி கோயிலுக்கு பெரும் திரளான அடியார்கள் வருகை தரு வதால் வாகன நெரிசலை தவிர்க் கும் வகையில் பிற்பகல் வேளை யில் வீதித்தடை அமுல் படுத்தப்பட வுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ.பற்குணராசா அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,

நல்லைக்கந்தனின் வருடாந்த உற்சவகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட வீதித்தடைகளையயாத்த விதமான வீதித்தடைகள் தினமும் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 6.00 மணிவரை யும் பின்வரும் இடங்களில் அமைக் கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

1. அரசடிச்சந்தி.

2. கோவில் வீதி சங்கிலியன் வீதி சந்தி.

3. பருத்தித்துறை வீதியில் மாநகர. சபை அலுவலகத்திற்கு முன்பாக. 4. செட்டித்தெரு செட்டித்தெரு ஒழுங் கைச்சந்தி.

5. பிராமணக்கட்டுக்குளம்

மேற்படி தற்காலிக வீதித்தடைகளை அனுசரித்து வடபிராந்திய போக்குவரத்துச் சபையினர், மினி பஸ் சங்கத்தினர், பாதுகாப்பு பிரிவி னர் மற்றும் பொலிஸார் ஆலயச் சூழலை அண்டியுள்ள வீதிகளூடாக வாகனப் போக்குவரத்தினை நிறுத்தி மாற்று வழியைப் பயன்படுத்துவதன் மூலம் கந்தசஷ்டி திருவிழா மிக அமைதியாகவும், பக்திபூர்வமாகவும் நடந்தேறுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com