Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » உடுவில் மகளிர் கல்லூரி மாணவி யாழ். மாவட்டத்தில் இம்முறை முதலிடம்

நேற்றுமுன்தினம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிர காரம் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை யைச் சேர்ந்த 118 மாணவர்களும் சென்.ஜோன்ஸ் பொஸ்கோ பாடசாலை யைச் சேர்ந்த 110 மாணவர்களும் சித்தி பெற் றுள்ளனர்.        மாவட்ட அளவில் முன்ன ணிப் பாடசாலைகளாகத் திகழ்கின்றன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நேற்றுப் பிற்பகலில்இணையத் தளத்தில் வெளியிடப்பட்டன.
உடுவில் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தாரணி பாலேந்திரா 187 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை
118 மாணவர்கள் சித்தியடைந்துள்ள னர். இப்பெறுபேறு பரீட்சைக்குத் தோற்றி யவர்களில் 47 சதவீதமாகும். ஏனைய மாணவர்களும் 71 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர். வி.அபிநயன் 183 புள்ளி களைப் பொறு மாவட்டத்தில் 5ஆவது இடத் தைப் பிடித்துள்ளார்.
சென்.ஜோன்ஸ் பொஸ்கோ
தோற்றிய 185 மாணவர்களில் 110 பேர் சித்தியடைந்துள்ளனர். இது 59.5 சத வீதமாகும். 100 புள்ளிகளுக்கு மேல் 171 பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் 181 பேரும் பெற்று சான்றிதழ் பெறுகின்றனர். ஜெக தீபிகா ஜெகதீஸ்வரன் 180 புள்ளிக ளுடன் மாவட்டத்தில் 9 ஆவது இடத்தைப் பெற் றுள்ளார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் சென்.திரேஸா பெண்கள் பாடசாலை மாணவனான நிசாந் ஹம்சிகன் 175 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை மாணவனாகத் தெரிவாகியுள் ளார்.
திருவையாறு ம.வி. மாணவி நகுல குமார் அபிராமி 173 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலைக்கு வந்துள்ளார்.
கிளிநொச்சி ம.வி மாணவியான செபஸ் ரியான் தேனுஜா 172 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com