Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » உசனில் இராணுவ புலனாய்வாளர்கள் எனக் கூறி கொள்ளையிட முயற்சிமூவர் மடக்கிப்பிடிப்பு

இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திய சிங்கள மொழி யில்பேசியவாறு வீட்டாரை மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குழு ஒன்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த விழிப்புக்குழுவிடம் மாட்டிக்கொண்டது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கி ழமைஇரவு 9.30 மணிக்கு உசன் விடத்தற்பளை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவரு வதாவது:
ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கி ளில் சென்ற ஆறுபேர் கொண்ட குழுவினர் தாம் புனர்வாழ்வளிக்கப் பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை விசாரணை செய்ய வந்துள்ளதாகச் சிங்களத்தில் பேசி வீட்டாரை மிரட்டியுள்ளனர்.

துரைசிங்கம் உதயதர்சினி எனும் பெண்ணொருவரின் வீட்டினுள் புகுந்த இவர்கள் அங்கிருந்தவர்களை அழைத்து பிரதேசத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் மற்றும் படையினரிடம் புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளோர் தொடர்பான தகவல்களைத் திரட்டவந்துள்ள தாகக் கூறி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை கேட்டுள்ளனர்.

நிலைமையை அறியாத வீட்டார் பயம் காரணமாக ஆவணங்களைக் கொடுக்க சிறிது நேரத்தில் தாம் கொண்டுவந்த பையிலிருந்த கூரிய கத்தியொன்றை எடுத்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த அனைவரையும் கத்தி முனையில் மிரட்டி வைத்திருக்க ஏனை யோர் வீட்டிலிருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அபகரித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

அப்போதுதான் வந்தவர்கள் கொள்ளையர்கள் என்று உணர்ந்த வீட்டார் கூக்குரல் இட ஆரம்பித்தனர் .அத்தடன் தமது பகுதி கிராம அலுவ லருக்கும் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.கிராம அலுவலர் இரவு கடமையில் இருந்த சிவில் பாதுகாப்புக் குழுவுக்குத் தகவல் கொடுக்க கொள்ளைக் கும்பலின் வரவுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த ஓட்டோவை மறித்து விசாரித்தபோது அப்பகுதி முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய்க்கு காய்ச்சல் என்றும் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வ தாகவும் சிங்களத்தில் கூறியுள்ளனர் ஓட்டோவில் சென்றவர்கள்.

இவர்களின் பதிலில் சந்தேகம் ஏற்பட சம்பந்தப்பட்ட வீட்டாருடன் தொடர்புகொண்டு அவர்களை வர வழைத்தபோது கொள்ளையர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர்.உடனே கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்குவந்த பொலிஸார் பிடிபட்ட மூவரையும் ஓட்டோவையும் கொண்டுசென்றனர்.மற்றையமூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.சம்பவத்தில் மாட்டிக்கொண்ட மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் சரளமாக சிங்களம் பேசக் கூடியவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள்மூலம் தெரியவந்தது.

இதேவேளை கொள்ளையர்களில் ஒருவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலியைச் சேர்ந்த சிங்கள மாணவர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com