Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » இரண்டு எக்ஸ்ரே இயந்திரங்களும் பழுதடைந்ததால் நோயாளர் நெருக்கடி

யாழ்.போதனா வைத்திய சாலையில் பழுதடைந்து ஒரு வாரத்துக்கு முன்னர் திருத்தப் பட்ட எக்ஸ்ரே இயந்திரம் கடந்த வியாழக்கிழமை மீண்டும் பழுதடைந்துவிட்டது.
மற்றொரு எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து பல மாதங்களாகி விட்ட போதும் இதுவரை அது திருத்தப்படவில்லை. தற்பொழுது ஒரேயொரு எக்ஸ்ரே இயந்திரம் மட்டுமே இயங்கிவருகிறது. இதனால் நோயாளர்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்வதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். போதனா வைத்தியசாலையிலுள்ள எக்ஸ்ரே இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைவது வழமையாகி விட்டதாக விசனம் கூறப்படு கின்றது.

அதற்க்கு பதிலாக புதிய எக்ஸ்ரே இயந்திரங்களை கொள்வனவு செய்வதாகவும் தெரியவில்லை. பலவருடங்களாகவே அங்கு மூன்று இயந்திரங்கள் மட்டுமே காணப்படுகின்றன.தற்பொழுது ஒரேயொரு இயந்திரம் மூலம் நோயாளர்களினது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 150 இற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு “எக்ஸ்ரே” எடுக்க வேண்டியுள்ளது.

விபத்துக்களால், வேறு பல நோய்களாலும் வெளி நோயா ளர்கள் மட்டுமன்றி வைத்திய சாலைகளிலிருந்தும் எக்ஸ்ரே எடுக்கச் செல்கின்றனர்.அவர்களது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட் டுள்ளது என்று கூறப்படுகிறது.ஒரேயொரு இயந்திரம் மூல மாக இயந்திரத்தின் தானியங்கு திறனுக்கும் அப்பால் அதிக எண்ணிக்கையில் படம்பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் அந்த இயந்திரத்தின் செயற்திறன் பாதிக்கப்படுகிறது.

தொடர் பாவனையால் வெப்பமேறி செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் நோயாளர்களின் நலன் கருதி அவசர தேவை கருதி அதன் செயற்பாட்டை இடைநிறுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.பழுதடைந்த இயந்திரங்கள் திருத்தப்படுமிடத்து அல்லது புதிய இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படுமிடத்து மட்டுமே நெருக்கடி களைக் குறைக்க முடியும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com