Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » இதுவரை 80 பேருக்கு செயற்கை அவயம் கோண்டாவிலில் 28 ஆம் திகதி வரை முகாம்

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் ஜெய்ப்பூர் செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் கடந்த 3 ஆம் திகதி முதல் கோண்டாவில் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது.

போரினாலும், போலியோ போன்ற நோய்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயற்கை அவயங்களை இலவசமாகப் பொருத்துவற்காக இந்த முகாம் கோண்டாவில் பிரதேச வைத் தியசாலையில் நடைபெற்று வருகின்றது.

இதுவரை 80 பேருக்கு இந்தச் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 830 பேர் அவயங்களைப் பொருத்துவதற்குத் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக விண்ணப்பித்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இவர்களுக்குச் செயற்கை அவயங்களைப் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் டாக்டர் எஸ்.சர்மா தலைமையில் 20 வைத்தியர் அடங்கிய குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முகாம் தொடர்பாக அங்கு கடமையில் ஈடுபட்டி ருந்த வைத்தியர் ஒருவர் தெரிவிக்கையில்:
அனைத்துப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக மக்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் செயற்கை அவயம் பொருத்தும் தேவையுள்ளோருக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவார்கள். மதிய போசனமும் வழங்கப்படும்.

தேவையுடையோருக்கு காலையில் அவயங்கள் பொருத்துவதற்கான அளவுகள் எடுக்கப்பட்டு அளவு அச்சில் போடப் பட்டுப் பின்னர் அவர்களுக்குரிய செயற்கை அவயவங்கள் பொருத்தப்படும். இதுதொடர்பான செய்தி கிடைக்காதவர்கள் கோண்டாவில் பிரதேச வைத்தியசாலைக்கு 28 ஆம் திகதிக்கு முன்னர் வரும் பட்சத்தில் அவர்களுக்குரிய செயற்கை அவயம் பொருத்தப்படும் என்றார்.

– உதயன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com