Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » இணுவிலில் வெள்ளை நாகம் ஒன்று பிடிக்கப்பட்டது

இணுவில் பகுதியில் வெள்ளை நாகபாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இணு வில் இளந்தாரி வைரவர் ஆல யத்துக்கு அருகில் உள்ள கடையில் இருந்து இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டது.

கடந்த வாரம் இதேபோன்று ஒரு வெள்ளை நாகபாம்பு பருத்தித்துறைப் பகுதியில் பிடிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள கிராம அலுவலர் மூலம் மிருகக்காட்சி சாலைக்கும் அறிவிக்கப்பட்டது.இந்த வாரத்தில் பொது மக்களினால் பிடிக்கப்பட்ட இரண்டாவது வெள்ளைநாகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்தப் பாம்பு மிகவும் வெள்ளை நிறமாகக் காணப்படுவதுடன் சங்கு சக்கரம் கொண்ட பாம்பாகவும் காணப்படுகின்றது.
அந்தப் பகுதி இளைஞர்களினால் இந்தப் பாம்பு பிடிக் கப்பட்டு ஒரு கூட்டில் விடப்பட்டுள்ளது. இந்தப் பாம்பை அதிக எண்ணிக்கையான பொது மக்கள் பார்த்து வருகின்றார்கள். இதேவேளை குறிப்பிட்ட பாம்பு அயலில் உள்ள ஆலயத்தின் பாம்பெனவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு வெள்ளை நாகம் பிடிக்கப்படுவது புதிதான விடையம் அல்ல என தெரிக்கின்றனர் சில பெரியவர்கள். யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வெள்ளை நாகம் உள்ளதெனவும் இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com