Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » இணுவிலில் அவயவம் பொருத்தும் இலவச சிகிச்சை முகாம்

யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகமும் மோட்டிவேசன்-இலங்கை நிறுவனமும், ஜொகானிற்றின் நிதிஉதவியுடன் வவுனியா ஓகன்,கண்டி சென்ரர் போர், மன்னார் வாழ்வுதயம்,  கண்டி கான்டிகாப் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து  25,26.27 ம் திகதிகளில் இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் மாற்று வலுவுடையோருக்கு அவயவம் பொருத்தும் இலவச சிகிச்சை முகாமை நடாத்த உள்ளனர்.

முதற்கட்டமாக 60 பயனாளிகள் வரை இச்சேவையை பெறவுள்ளனர். யாழ்நகர்மைய றோட்டறக்ட் கழகமும் சொண்ட் நிறுவனமும் இணைந்து பயனாளிகள் தெரிவை மேற்கொண்டு வருகின்றனர். மிதிவெடி மூலம் பாதிப்புற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com