Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » ஆதித் தமிழனின் கலைகளில் ஒன்றான தப்பாட்டம் யாழ் பல்கலையில்(காணெளி)

ஆதித் தமிழனின் கலைகளில் ஒன்றான ‘தப்பு’ வாத்தியங்களுடனான ஆட்டம் தமிழ்நாட்டுக் கலைஞர்களினால் இன்று மாலை 4 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் ‘தப்பு’ இசையுடன் கூடிய நடனத்தை ஆடிக் காண்பித்தனர்.

{இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன} – நன்றி கீற்று

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com