Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » அனலை தீவுக்கான படகு நடுக்கடலில் உடைந்து மூழ்கியது

காரைநகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 33 பயணிகளுடன் அனலை தீவுக்குச் சென்று கொண்டிருந்த படகு நடுக்கடலில் உடைந்து கடலில் மூழ்கியது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு உடனடியாக விரைந்த காரைநகர் கடற்படையினர் படகில் இருந்த 33 பயணிகளையும் பாதுகாப்பாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது:

காரைநகரில் கடற்படையினர் நடத்திய இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ள அனலைதீவில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

தமது மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் படகில் அனலைதீவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். இதன் போது அந்தப் படகு ஊர்காவற்றுறை கடற் கோட்டைக்குச் சமீபமாகச் சென்று கொண்டிருந்த போது பாறையில் மோதிப்படகு உடைந்தமையால் அதனுள் கடல் நீர் உட்புகத் தொடங்கியது.

இதனால் பயணிகள் பீதியடைந்தனர். படகு மீண்டும் காரைநகருக்குத் திருப்பப்பட்டது. அத்துடன் நடுக்கடலில் மூழ்கிக் கொண்டும் இருந்தது. பட கோட்டி காரைநகர் கடற்படைக்கு வழங்கிய தகவலை அடுத்து கடற்படையினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வேகப் படகுகளில் விரைந்து சென்று படகில் இருந்த பயணிகளைக் காப்பாற்றி அனலை தீவுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com