Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » அடையாளத்தை இழக்கும் யாழ்ப்பாணம் – ஆறு.திருமுருகன்

யாழ்ப்பாணம் தன் அடையாளத்தை இன்று இழந்து கொண்டிருக்கிறது. இதனைச் சீர்ப்படுத்த இளம் தலைமுறையினரைச் செம்மைப்படுத்த வேண்டும்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் மாகியப் பிட்டியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:

ஒரு காலத்தில் ஆசிரியர்களை மதிக்கின்ற, கௌரவப்படுத்துகின்ற மாணவ சமுதாயமொன்று இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய நிலை தலைகீழாக மாறியுள்ளது.பெற்றோர் உழைத்துப் போடுகின்ற பணத்தில் தமது காலத்தை வீணடித்து வீதிகளில் நின்று சமூகப் பிறழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தாம் படிக்கும் காலத்தில் பகுதிநேரமாக உழைத்து அதில் வருகின்ற பணத்தை வைத்தே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஆனால் இங்கு அப்படி யில்லை. பட்டம்பெற்ற இளை ஞர், யுவதிகள் கூடத் தமது சொந்த உழைப்பில் வாழாமல் அரச உத்தி யோகம் கிடைக்கும் வரையும் காலத்தை வீணடித்து வருகின் றார்கள்.

இந்த நிலைமை மாறவேண் டும். இன்றைக்கு நாம் தொலைத் திருக்கின்ற அடையாளங்களை மீளவும் கட்டியெழுப்பவேண் டும். இதற்கு இளைய தலைமுறை யினைச் செம்மையாக வளர்த் தெடுக்கவேண்டும் என்றார்.

நன்றி: தீவகன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com