Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய நிறுவனத்திடம்

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அண்மையில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடலின்போது, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலர் சிவஞான ஜோதி இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இக்கைத் தொழிற்பேட்டையின் நிர்வாகக் கட்டிட நிர்மாணப்பணிகள் தற்போது, நிறைவடைந்துள்ள நிலையில் மின்சாரம், நீர் மற்றும் உள்ளகப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்திய நிறுவனம் மேற்கொள்ளும் எனவும் மேற்படி கைத்தொழிற்பேட்டையில் முதலீடு செய்வோர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இக் கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்வதற்கு 52 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும்
இந்திய அரசின் நன்கொடையான 174 மில்லியன் ரூபாவும் சிறிலங்க அரசின் 26 மில்லியன் ரூபா நிதியுடன் சேர்த்து 200 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கைத்தொழிற்பேட்டை புனரமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com