Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?அறிந்து கொள்ள 1919

votingநடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும் என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அரச தகவல் மையத்தை 1919 என்ற மூலம் தொலைபேசி இலக்கம் ஊடகாக தொடர்பு கொண்டு உங்களது உரிய மாவட்டத்தையும் உங்களது தேசிய அடையாள அட்டை எண், முழுப் பெயரையும் அறிவித்து, வாக்குரிமை வழங்கும் பகுதியின் பெயரையும் மாவட்ட எண்ணையும் வாக்காளர் பட்டியலிலுள்ள தமது வரிசை எண்ணையும், அல்லது சீரியல் எண்ணை அறிந்து கொள்ளமுடியும்.

மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய இச்சலுகையை தேர்தல் திணைக்களமும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் இணைந்து ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com