Subscribe:Posts Comments

You Are Here: Home » மருத்துவம், யாழ்.செய்திகள் » லயன்ஸ் கழகங்களின் கூட்டத்தில் யாழ். ஆஸ்பத்திரிக்கு இங்குபேட்டர் வாங்க 12 நிமிடத்தில் 7 லட்சத்து 55 ஆயிரம் ரூபா

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறக்கும் போதிய வளர்ச்சியற்ற மற்றும் நிறை குறைவான குழந்தைகளைப்  பராமரிப்பதற்கான பெட்டிகளை (இங்கு பேட்டர்) கொள்வனவு செய்வதற்காக யாழ்.மாவட்ட லயன்ஸ் கழகங்களின் கூட்டத்தில் 12 நிமிடத்தில் 7 லட்சத்து 55 ஆயிரம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டது.

கடந்த 31 ஆம் திகதி யாழ்ப் பாணம் ஞானம்ஸ் ஹோட்ட லில் சர்வதேச லயன்ஸ் கழக 306 பி 1 மாவட்டத்தின் 8,9, 10,11, ஆகிய வலயங்களைச் சேர்ந்த லயன்ஸ் கழகங்கள் இணைந்து புதிதாகப் பொறுப் பேற்ற மாவட்ட ஆளுநர் லயன் பிரியந்த பெர்ணாண்டோ, சர்வதேச லயன்ஸ் கழகங்களின் பணிப்பாளர் லயன் சுனில் வட்டவல ஆகியோருக்கு  வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று சிறுவர் பராமரிப்பு நிபுணர் வைத்திய கலாநிதி க.அருண்மொழி, யாழ். போதனா வைத்தியசாலையில் மாதாந்தம் பிறக்கும் பிள்ளைகளில் குறைந்தது 50 சிசுக்கள்  போதிய வளர்ச்சியின்றியும் நிறை குறைவான நிலையிலும் பிரசவமாகின்றன. இவற்றைப் பராமரிக்கக் குறைந்தது 30 பராமரிப்புப் பெட்டிகள் (இங்கு பேட்டர்)   தேவையெனச் சுட்டிக் காட்டினார்.
அவரது உரையினையடுத்து மாவட்ட ஆளுநர் லயன் பிரி யந்த பெர்ணாண்டோ இதற்கான ஆரம்ப நிதியினை வழங்க கூட்டத்தில் அமர்ந்திருந்த ஏனையோரும் தம்மால் இயன்ற நிதியுதவியை வழங்கினார்கள். சுமார் 12 நிமிடத்தில் 7 லட்சத்து 55 ஆயிரம் ரூபா சேகரிக்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட நிதி சர்வதேசப் பணிப்பாளர் லயன் சுனில் வட்டவலவிடம் கையளிக்கப்பட்டது. சர்வதேச லயன்ஸ் கழக நிதியுடன் இணைத்து அடுத்த மாதமளவில் 30 பராமரிப்புப் பெட்டிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு  வழங்கப்படுமெனவும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பராமரிப்புப் பெட்டியொன்றை ஏற்கனவே லயன்ஸ் கழகத்தினர் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com