Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, மருத்துவம், யாழ்.செய்திகள் » யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒட்சிசன் உற்பத்தி இயந்திரம்

வளிமண்டலத்திலிருந்து ஒட்சிசன் வாயுவை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று பிரான்ஸ் நாட்டினால் சுகாதார அமைச்சின் ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தன்னியக்க இயந்திரமான இதன் பெறுமதி 40 மில்லியன் ரூபா என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.இந்த இயந்திரம் வளிமண்ட லத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சி அதிலிருந்து ஒட்சிசன் வாயுவைப் பிரித்தெடுத்து பிறி தொரு கொள்கலனுக்கு அனுப்பு கிறது. அதற்குள் இரசாயனப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டு ஒட்சிசன் வாயு தூய்மையாக்கப்படுகின்றது.
அதன் பிறிதொரு பகுதி ஊடாக தேவையற்ற வாயுக்கள் வெளியேறுகின்றன. தேவையான ஒட்சிசன் வாயு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வேறு ஒரு கொள்கலனுக்குள் செலுத்தப்பட்டு அதிலிருந்து இயந்திரம் மூலமாகச் சிலிண்டருக்கு அனுப்பப்படு கிறது. மனிதவலு இன்றி தானி யங்கியாகச் செயற்படும் தன்மை வாய்ந்ததாக இந்த இயந்திரம் உள்ளது.
இது தேவைக்கேற்ப ஒட்சிசன் வாயுவை தயாரித்துச் சிலிண்டர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். சிலிண்டர்கள் நிரம்பிய நிலையை அடைந்ததும் இந்த இயந்திரம் தானாகவே ஒட்சிசன் உற்பத்தியை நிறுத்திக் கொள்ளும். இரவு, பகல் தொடர்ச்சியாக இயங்கும் தன்மையை இது கொண்டது.
சிலிண்டர்களில் ஒட்சிசன் வாயு நிரம்பியதும் அவற்றை எடுத்து விட்டு ஏனைய சிலிண் டர்களை பொருத்துவதற்கு மட்டுமே இங்கு மனிதவலு பயன்படுகின்றது. இந்த இயந்திரத் தொழில் நுட்பம் மூலம் 1 மணித்தியாலத் துக்கு 6 ஆயிரத்து 500 லீற்றர் கொள்ளளவுடைய நான்கு சிலிண்டர்களை நிரப்ப முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாணத்தில் கூடிய வலுகொண்ட ஒட்சிசன் உற்பத்தி செய்யும் இயந்திரம் இந்த வைத்தியசாலையில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. இதனைவிட யாழ்ப்பாணம், மன்னார், வவு னியா ஆகிய வைத்தியசாலை ளில் குறைந்த வலுகொண்ட ஒவ்வொரு இயந்திரங்கள் மூல மாக ஒட்சிசன் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் ஓர் இயந்திரம் நிறுவப் பட்டுள்ளது.

இதுவரை காலமும் யாழ். போதனா வைத்தியசாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் வாயு போதாமையினால் வாரத் துக்கு இரண்டு தடவையாவது அநுராதபுரத்திலுள்ள ஒட்சிசன் உற்பத்தி செய்யும் நிலையத்துக்குச் சென்று ஒட்சிசன் சிலிண் டர்களில் எடுத்துவரப்படுவது வழமை. எதிர்காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் இந்த இயந்திரம் மூலம் 60 வீத மான ஒட்சிசன் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com