Subscribe:Posts Comments

You Are Here: Home » ஆலய செய்திகள், ஏனயவை, யாழ்.செய்திகள் » ஸ்ரீ வல்லிபுராழ்வார் கொடியேற்றத்திருவிழா இன்று ஆரம்பம்

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் 2010 ஆண்டு மகோற்சவம் இன்று 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

காலை 10.00மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் தொடர்ந்து 17 தினங்கள் நடைபெறும்.

15ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனம்
17ம் திகதி துகில் திருவிழா
18ம் திகதி பாம்புத் திருவிழா
19ம் திகதி ஹம்சன் போர்த்திருவிழா
20ம் திகதி வேட்டைத் திருவிழா
21ம் திகதி மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழா
22ம் திகதி காலை 9.15 மணிக்கு தேர் திருவிழா
23ம் திகதி மாலை 6 மணிக்கு சமுத்திரத் தீர்த்த திருவிழா
24ம் திகதி காலை 10.00 மணிக்கு கேணி தீர்த்தத் திருவிழா
இன்றில் இருந்து 6ம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும், 7ம் திருவிழா தொடக்கம் 17ம் திருவிழா வரை வெளி வீதியும் வலம் வருவார்.

வடக்கு வீதியில் சுவாமி வலம் வரும்போது கற்கோவளம் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் அன்றய திருவிழாவின் கருத்தை சித்தரிக்கும் விதத்தில் நிகழ்சி இடம்பெறும்.

குறிப்பு: சமய கோட்பாடுகள்,கலாச்சாரத்திற்கு அமைய பெறுமதி மிக்க தங்க ஆபரணங்களை தவிர்த்து திருவிழாக்களில் கலந்து கொண்டு வல்லிபுர மாயவனின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com