Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள், விளையாட்டு » வல்வைப் பட்டப் போட்டியில் ட்ராகன் வாகை சூடியது

வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக் கழ கம், தைப்பொங்கல் தினத்தை யொட்டி நடத்திய வினோதப் பட்டங்கள் போட்டியில் சாம் ஜெயவேல் என்ற இளைஞர் கட்டிய ட்ராகன் பட்டம் வென்றது. காத்தாடி விட்ட அந்த இளைஞருக்கு முதல் பரிசாக மின்சாரக் காற்றாடியை உதயசூரியன் கழக முன் னாள் உதைபந்தாட்ட, கரப் பந்தாட்ட வீரர் கே.தேவ சிகாமணி வழங்கினார்.

இரண்டாம் பரிசைப் பெற்ற ம.நாராணயணசாமிக்கு உதயசூரியன் விளையாட்டுக் கழக தலைவர் சு.கெங்காரூபனும் மூன்றாம் பரிசைப் பெற்ற வெ.ரகுவுக்கு வல்வெட்டித்துறை கடற்றொழில் சங்கத் தலைவர் ஜே.ஜெனார்த் தனும் வழங்கினர்.

வல்லை உல்லாசக் கடற் கரையில் மாலை 4.30 மணி யளவில் போட்டி ஆரம்பமா னது. 17 பட்டங்கள் போட் டியில் கலந்துகொண்டன. “இரட்டைப் பெட்டிக் கொடி”, “மணிக்கூடு”, “கப்பல்”, “பஞ்ச வர்ண ரொக்கெட்”, “சுழலும் பெட்டிப் பட்டம்”, “பிளேன்”, “64 அடி நீள வால் நட்சத்திரம்”, “குடும்பிடுபூச்சி”, “பராந்து’, “பொங்கல் பானை”, “கப்பல்”, “புறா”, “ஆள் பட்டம்”, “பாம்பு”, ஆகிய பெயர்களில் பட்டங்கள் போட்டியிட்டன.

1942ஆம் ஆண்டில் கப்பலில் பணியாற்றியவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவருமான து.நவரத் தினம் என்பவர் தனது 82 வயதிலும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு கப்பல் பட்டம் ஒன்றைக் கட்டியிருந்தார். அதற்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com