Subscribe:Posts Comments

You Are Here: Home » மீன்பிடி, யாழ்.செய்திகள் » வடமராட்சி வடக்கு மீனவரின் 342 படகுகள் மீள ஒப்படைப்பு

வடமராட்சி வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களின் 342 மீன்பிடிப் படகுகளும் அவற்றுக்கான இயந்திரங்களும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ரவிந்திர விஜய குணவர்த்தன தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் வன்னிப்பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து சென்ற வடமராட்சி வடக்குப் பிரதேச மீன வர்கள் தமது படகுகள் அவற் றின் வெளி இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள் என்பவற்றைத் தத்தமது கடற்கரைகளில் விட்டுச் சென்றிருந்தனர்.

இவர்கள் விட்டுச் சென்ற மீன்பிடிப்படகுகள், இயந்திரங்கள் போன்றவற்றை கடற்படையினர் கைப்பற்றி தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.போர் முடிவுக்கு வந்த பின்னர் மீள்குடியேறிய வடமராட்சியில் வடக்குப் பிரதேச மீனவர்கள், தாம் கடல்தொழிலை மீண்டும் ஆரம்பிக்க தமது கடற்தொழில் உபகரணங்களை மீளவழங்குமாறு பருத்தித்துறையில் தளமிட்டுள்ள கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடற்படையினர் மீனவர்களின் ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர் அவரவர்களின் மீன்பிடிப்படகுகள், இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த 384 மீன்பிடிப் படகுகள், இயந்திரங்களில் இதுவரை 342 மீன்பிடிப்படகு களும் இயந்திரங்களும் உரிய மீனவர்களிடம் கையளிக்கப்பட்டதாக வடமாகாண கடற்படைத்தளபதி தெரிவித்தார்.இன்னமும் 42 படகுகள் உரிமை கோரப்படாத நிலையில் கடற்படையினரின் பாது காப்பில் இருப்பதாகத் தெரிவித்த கடற்படைத்தளபதி இந்தப் படகுகளுக்கு உரிமையுள்ள மீனவர்கள் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து படகுகளைப்  பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com