Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ் மாநகர வர்த்தகநிலையங்களை 8.30 மணிவரைதிறந்துவைத்திருக்குமாறு கோரிக்கை

Shopயாழ் மாநகரத்திற்குட்பட்ட பிரதான வீதிகளிலுள்ள வர்த்தகநிலையங்களை இரவு 8.30மணிவரைதிறந்துவைத்திருக்குமாறு யாழ்மாநகர ஆணையாளர் எஸ்.பிரணவநாதனிடம் யாழ் சிவில் சமூகத்தின் தலைவர் கே.ரி.றாஜசிங்கம் கோரிக்கைஒன்றை வழங்கியுள்ளார்.

2009ம் ஆண்டுயுத்தம் முடிவடைந்தபின்னரும் யாழ் மாநகரத்திற்குட்பட்ட வர்த்தகநிலையங்கள் 6.30 மணிக்கே மூடப்படுகின்றன. இதனால் நகரம் சனநடமாட்டம் இன்றிவெறிச்சோடி இருக்கிறது. உயிர்காக்கும் மருந்துகடைகள் 6.30 மணிக்கு மூடப்படுவதால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்,

இதனால் யாழ் மாநகரத்திற்குட்பட்ட ஸ்ரான்லிவீதி, ஆஸ்பத்திரிவீதி, கே.கே.எஸ் வீதி போன்றபிரதான வீதிகளிலுள்ள வர்த்தகநிலையங்களை 8.30 மணிவரைதிறந்துவைத்திருக்கவும் ஏதாவது ஒரு மருந்துக்கடையையேனும் ஒன்று இரண்டு உணவகங்களையேனும் இரவு முழுவதுமாக திறந்துவைத்திருக்கவும் ஏற்பாடுசெய்யுமாறு அக் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com