Subscribe:Posts Comments

You Are Here: Home » கைத்தொழில், யாழ்.செய்திகள் » யாழ். மாநகர சபையினால் கழிவுப் பொருட்களிலிருந்து சேதனப் பசளை தயாரிப்பு

யாழ். மாநகர சபையினால் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை சேதனப் பசளையாக தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சேதனப் பசளை தயாரிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். மக்களை எதிர்காலத்தில் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களைக் கொண்டு சேதனப் பசளை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பெருமக்கள் இயற்கையான இச்சேதனப் பசளையைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில் இலவசமாக கிடைக்கும் கழிவுப் பொருள்கள் இந்த மக்களுக்கே பயன்படும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் குறைந்த விலையில் பெற்று தங்கள் வீட்டுத் தோட்டங்களுக்கு பயன்படுத்த முடியுமெனவும் அவர் கூறினார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com