Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » யாழ். பல்கலை புதுமுக மாணவருக்கு புதன் முதல் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அனைத்துப் பீட புதுமுக மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர் வரும் 02ம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகும் என யாழ். பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

முகாமைத்துவ வணிகபீடம், விஞ்ஞானபீடம் என்பவற்றுக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு திசைமுகப்படுத்தல் நிகழ்வுடன் கல்விச் செயற்பாடு ஆரம்பமாகும் எனவும் அத்துடன் கலைப்பீடத்துக்குள் அடங்கும், கலை, சட்டம் என்பவற்றுக்கு தெரிவான மாணவர்களுக்கு எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கிலும், அதற்கு மறுநாள் 9 ஆம் திகதி புதன்கிழமை இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் பாடங்களுக்குத் தெரிவான புதுமுக மாணவர்களுக்கு மருதனார்மடம் இராமநாதன் நுண் கலைக்கழகத்திலும் திசைமுகப்படுத்தல் நிகழ்வுடன் கல்விச் செயற்பாடு ஆரம்பமாகும்.

இதேவேளை யாழ்.பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் ஏனைய மாணவர்களுக்கான விரிவுரைகளில், நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் கலைப்பீட மாணவர்களுக்கும், எதிர்வரும் 2 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் முகாமைத்துவ வணிகபீடம், விஞ்ஞானபீடம் மாணவர்களுக்கும் விரிவுரைகள் இடம்பெறும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com