Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ். பல்கலையின் புதிய பொறியியல் பீடம் பெப்ரவரியில் ஆரம்பம்

Jaffna_Universityயாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் பீடம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்படி பொறியியற் பீடம், உயர் கல்வி அமைச்சின் 1.54 பில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் 4 கட்டிடங்களைக் கொண்டதாகவும், மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகளையும் உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த பொறியியல் பீடத்திற்கு சுமார் 50 மாணவர்கள் வருடா வருடம் உள்வாங்கப்படவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பொறியியற் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடப் பீடாதிபதி டாக்டர் அற்புதராஜா இரண்டு வருடங்களுக்கு கடமையாற்றவுள்ளார்.

அதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயம் மற்றும் உயிரியல் பீடம் 393 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியிலும், மாணவர்களுக்கான இரண்டு தங்குமிட விடுதிகள் 196 மில்லியன் ரூபா செலவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நிதியினையும் உயர் கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com