Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » யாழில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (JITF-2013 ) நாளை ஆரம்பம்

Jaffna International Trade Fare—2013யாழ்ப்பாணத்தில் நான்காவது முறையாகவும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair—2013) நாளை ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சி 18 (வெள்ளிக் கிழமை), 19சனிக்கிழமை, 20 ஞாயிற்றுக் கிழமை) ஆகிய மூன்று நாட்களில் துரையப்பா விளையாட்டரங்கில் காலை 10.00 தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல கலந்துகொள்ளவுள்ளதுடன் விவசாயம், கைத்தொழில் – கட்டுமானம், உணவு மற்றும் மென்பானம், பொதியிடல், ஆடை கைத்தொழில், வாகனங்கள், தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம், பராமரிப்பு, போக்குவரத்து – சுற்றுலா, நிதியியல் சேவைகள் மற்றும் இதர நுகர்வு பொருட்களுக்கான பல புதிய தொழில் நுட்ப அறிமுகங்களுடன் கூடிய புதிய உள்ளூர், வெளியூர் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இக்கண்காட்சி நடைபெறும் ஒவ்வாரு தினமும் துரையப்பா விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது .
இந்த வர்த்தக சந்தைக்கு ஊடக அனுசரனையினை உதயன், சுடர்ஒளி, வசந்தம் ரீவி மற்றும் வசந்தம் எப்.எம் ஆகியன வழங்குகின்றன.

நன்றி- நிருஜன்

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com