Subscribe:Posts Comments

You Are Here: Home » ஆலய செய்திகள் » மக்கள் கூட்டம் புடைசூழ, மங்கல வாத்தியம் முழங்க நாவலர் சிலை மணிமண்டபத்தில் நேற்று பிரதிஷ்டை

நல்லை ஆறுமுக நாவலரின் சிலை நேற்று நல்லூர் நாவலர் மணி மண்டபத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டு நாவலர் மணி மண்டபத்திலிருந்த நாவலர் சிலை, நாவலர் மண்ட பத்துக்கு இடமாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் மணி மண்டபத்தில் இடம் மாற்றும் வகையில் மேற்கொண்ட தீர்மானங் களின் அடிப்படையில் நாவலர் சிலை நேற் றுக்காலை நாவலர் மண்டபத்திலிருந்து நல் லூர் மணிமண்டபத்துக்கு மங்கலவாத்தியம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ் வில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோ.பற் குணராசா, நல்லை ஆதீன முதல்வர் மற்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், நாவலர் சபையினர், இந்து சமய பேரவையினர், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரி யர்கள், யாழ்.வணிகக்கழகத்தினர், சைவபரிபாலன சபை பிரதிநிதிகள், சைவ சமய அமைப் புகள், சைவ அபிமானிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாவலர் வீதி, கோயில் வீதி வழியாக மணி மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்ட நாவலர் சிலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதேவேளை நல்லூர் முருகன் ஆலய தெற்கு வீதியில் நாவலர் மணி மண்டபத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

நன்றி: வலம்புரி

1 Comment

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com