Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » புளியங்குளத்தில் புகையிரதம் மோதி தந்தை மற்றும் மகன் மரணம்

yal devi train at killinochiஇன்று காலை ( 08.03.2014) பளையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சொகுசு புகையிரதம் புளியங்குளம் பகுதியில் தந்தை மற்றும் மகன்ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே இருவரும் மரணமடைந்துள்ளனர்.

மேற்படி வியம் தொடர்பாக தெரிய வருவது இன்று காலை 6.30 மணியளவில் பளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட சொகுசு புகையிரதம் 7.00 மணியளவில் கிளிநொச்சியை அடைந்து புளியங்குளம் பகுதியினை 7.30 மணியளவில் அண்மித்த வேளை 168மைல் கல் பகுதியில் பாதுகாப்பற்ற கடவை ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மகன் மீதும் புகையிரதம் மோதியதால் ஸ்தலத்திலேயே இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தினை அடுத்து புகையிரத்தினை கட்டுபடுத்தி நிறுத்தியதைத் தொடர்ந்து மரணமடைந்த இருவருடைய உடலும் புகையிரதம் மூலம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு புகையிரத நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா பொலீஸார் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

மேற்படி இறந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை இணங்காணப்பட வில்லை இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். இறந்த குடும்பஸ்தவரின் வயது 40 ஆகவும் மகனின் வயது 12ஆகவும் கணிக்கப்படுகிறது.இறந்தவர்கள் நெடுங்கேணி ஒலுமடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com