Subscribe:Posts Comments

You Are Here: Home » கைத்தொழில் » பனம்பழத்திலிருந்து களியைப் பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்

நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி பனம் பழத்திலிருந்து பனங்களியைப் பிரித்தெடுக்கும் செயற்பாடு முதன் முறை யாக யாழ்ப்பாணத்தில் நேற்று அறிமுகப் படுத்தப்பட்டது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவி ருத்தி நிலையத்தினால் வடிவமைக்கப் பட்ட இந்த நவீன இயந்திரம் பனை அபி விருத்தி சபையிடம் நேற்றுக் கையளிக் கப்பட்டது.
பனை அபிவிருத்திச் சபையின் கண்டி வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள “கற்பகம்’ விற் பனை நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையப் பொறியியலாளர் மாலினி ரணதுங்கவினால், பனை அபி விருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவ ரத்தினத்திடம் இந்த இயந்திரம் கையளிக் கப்பட்டது.
ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறு மதியான இந்த இயந்திரம் போன்று இன் னும் ஆறு இயந்திரங்கள் பெறப்பட்டு முதற்கட்டமாகப் பனம் பழத்திலிருந்து பனங்களியைப் பிரித்தெடுக்கும் செயற் பாடு பரீட்சார்த்த முயற்சியாக இடம்பெற வுள்ளது.
இயந்திரம் ஒன்றில் 30 கிலோ எடை யுள்ள பனம்பழத்தினை ஒரே தடவையில் இட்டு அதிலிருந்து 15 முதல் 20 நிமிடங் களில் பனங்களியைப் பெறமுடியும்.
இந்த இயந்திரங்கள் மூலம் யாழ்.மாவட் டத்தில் இம்முறை அதிகளவான பனங் களியைப் பெற்று அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருள்களின் அளவையும் அதிகரிக்க கூடிய நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மற்றும் துறைசார் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

நன்றி: உதயன்

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com