Subscribe:Posts Comments

You Are Here: Home » மீன்பிடி, யாழ்.செய்திகள் » நெடுந்தீவுக் கடலில் மீன்வளம் குறைவு: வெறுங்கையுடன் திரும்பும் மீனவர்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் தற்சமயம் கடல் உணவுப் பொருள்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து காணப்படுவதாக வும், இதனால் தொழிலுக்காகச் செல்லும் மீனவர்கள் வெறும் கையுடன் திரும்ப வேண்டியுள்ளதாகவும் நெடுந்தீவு மீனவர் கள் கூறுகிறார்கள்.
இதனால் தற்சமயம் நெடுந்தீவில் கடல் உணவுகளுக்குப் பலத்த தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. வட. இலங்கைக் கடல் பிராந்தியத்தில் மீன் வளங்கள் அருகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் நெடுந்தீவு மீனவர்கள் தாங்கள் தினமும் பெரும் ஏமாற்றத்துடனேயே திரும்புவதாகவும் தொழில் செய்ய முடி யாத நிலை ஏற்படலாம் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தினமும் பல நூற்றுக் கணக்கான இந் திய இழுவைப்படகுகள் இந்தப் பிராந்தி யத்தில் நுழைந்து சிறிதும் பெரிதுமாக உள்ள கடல் வளங்களை அள்ளிச் சென்ற தில் தற்சமயம் இப்பகுதிகளின் மீன் வளம் அருகிவிட்டதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com