Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நயினாதீவு குறிகாட்டுவானுக்கு இடையேயான கடற்பாதைச் சேவை மீண்டும் ஆரம்பம்

Nainatheevu (1)நயினாதீவு- குறிகாட்டுவானுக்கு இடையேயான கடற்பாதைச் சேவை இன்று புதன்கிழமை தொடக்கம் குறிப்பிட்ட நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று வேலணைப் பிரதேசசெயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். காலை 6 மணிக்கு குறிகாட்டு வானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் பாதை அங்கிருந்து காலை 7 மணிக்கு குறிகாட்டுவானுக்குத் திரும்பும். மீண்டும் முற்பகல் 11மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் மாலை 5 மணிக்கு நயினாதீவுக்கும் மாலை 6 மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் சேவையில் ஈடுபடும் என்றார்.

இதேவேளை இப் பாதை குறி காட்டுவானிலேயே நிறுத்தப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார். பாதையில் ஒவ்வொரு கியூப் கொண்ட 4 வாகனங்களை ஏற்றலாம் என்றும் மூன்று கியூப் டிப்பர் வாகனங்கள் பெரிய வாகனங்கள் என்பதால் ஏற்ற இயலாதுள்ளது என்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

பாதை தவிர்ந்த படகுச் சேவைகளும் வழமை போன்று இடம் பெறும். காலை 6மணிக்கு புறப்படும் பாதையில் பொது மக்களும் பயணிக்க முடியும். அதேவேளை வாகனங்களும் ஏற்றக் கூடியதாக இருக்கும். அத்தியாவசிய உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் லொறியும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com